திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வருடாந்திர ஜாதகம் விவரங்கள்
Written By Sasikala

2021 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - துலாம்

சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட துலா ராசி அன்பர்களே! இந்த ஆண்டு எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. திடீர் உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும்  நிலை வரலாம். பணவரத்து இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  மற்றவர்கள் மூலம் கிடைக்கும். 


வெற்றி என்ற இலக்கை நோக்கி  முன்னேறுவீர்கள். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். தாமதமான போக்கு காணப்பட்டாலும் மனம் மகிழும் சம்பவங்கள்  நடக்கலாம். வெளியூர் பயணங்கள்  மனதுக்கு  சந்தோஷத்தை தருவதாக இருக்கும்.  உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.  கொடுக்கல் வாங்கலில் கவனம்  தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.
 
தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது.  தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். சாதூரியமான பேச்சின் மூலம்  முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள்  அதிகரிக்கும்.
 
குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும்.  மற்றவர்கள் மூலம்  டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை  கிடைக்கும். பெண்களுக்கு கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும்.  பணபுழக்கம் அதிகரிக்கும்.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொண்டர்களின்  ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். 
 
கலைத்துறையினருக்கு மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி  செல்லலாம். கலைத்துறையினருக்கு தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்   ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். 
மாணவர்களுக்கு கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. 
 
சித்திரை 3, 4 பாதங்கள்:
இந்த வருடம் வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும்  அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து  அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை  ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம்  இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
 
சுவாதி:
இந்த வருடம் மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும்.  புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும்.  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த  காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும்.
 
விசாகம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த வருடம் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சனைகள்  தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து  செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். 
 
பரிகாரம்: நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
சிறப்பான கிழமைகள்: வெள்ளி, சனி
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6, 9
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும்
அனுகூலமான திசைகள்: மேற்கு, வடக்கு.